Connect with us

“இனி ஒரே தலைவர்.. அது விஜய் மட்டுமே” : புஸ்ஸி ஆனந்த் அதிரடி

Vijay_Pussy_Anand

Cinema News

“இனி ஒரே தலைவர்.. அது விஜய் மட்டுமே” : புஸ்ஸி ஆனந்த் அதிரடி

தளபதி என்ற அடைமொழியைக் கொண்டுள்ள நடிகர் விஜய் தலைவர் ஆகிவிட்டார் என தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் மக்கள் நலப்பணிகளை செய்து வந்த நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்குவதாக அறிவித்தார். மேலும், 2024 பாராளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்றும், 2026 சட்டசபை தேர்தலே தனது இலக்கு என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சென்னையில் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டியிருந்தார். அதில் 2026இல் விஜயை முதல்வராக்க அனைவரும் உழைக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து பேசிய புஸ்ஸி ஆனந்த், “தளபதி விஜய் தற்போது தலைவர் ஆகிவிட்டார். இனி ஒரே தலைவர்தான். எனவே விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்களாக இருந்தவர்கள் அனைவரும் இனி தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர்களாக செயல்படுவார்கள்.” என அறிவித்தார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "சுறா" வசனம் வைரல் – TVK தலைவர் விஜய்யை குறிவைக்கும் ட்ரோல் அலையால் அரசியல் சூடு!

More in Cinema News

To Top