Connect with us

புஷ்பா 2 படப்பிடிப்பின் போது சங்கடம்: ராஷ்மிகா மந்தனாவின் ஓபன் டாக்

Featured

புஷ்பா 2 படப்பிடிப்பின் போது சங்கடம்: ராஷ்மிகா மந்தனாவின் ஓபன் டாக்

சுகுமார் இயக்கத்தில், கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி வெளியான புஷ்பா 2 திரைப்படம் உலகளவில் மிகப்பெரிய வெற்றியை சந்தித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகி, இப்படம் ரூ.1600 கோடி வரை வசூல் சாதனையை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ.1029 கோடி வசூலித்து அசத்தியுள்ளது.

முதல் பாகத்தில் சமந்தா ஆடிய பாடல் ஹிட்டானது. இரண்டாம் பாகத்தில், அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆடிய “பீலிங்ஸ்” பாடல் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த பாடல் தொடர்பாக ராஷ்மிகா மந்தனா, ஒரு பேட்டியில், இந்த பாடலில் நடனம் ஆடும் போது தன்னை ஆரம்பத்தில் சங்கடமாக உணர்ந்ததாக தெரிவித்துள்ளார். “பீலிங்ஸ்” பாடலின் ஒத்திகை வீடியோவை பார்த்தபோது, மிகவும் ஆச்சரியமானதாக உணர்ந்துள்ளதாகவும், அல்லு அர்ஜுனுடன் நடனம் ஆடுவதில் மகிழ்ச்சி அடைந்ததாக கூறினார்.

இதோ, இந்த பாடலில், அல்‌லு அர்ஜுன் தூக்கி நடனமாடும் காட்சியில் ஆரம்பத்தில் ராஷ்மிகாவிற்கு பயமாகவும் சங்கடமாகவும் உணர்ந்தது. ஆனால், அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குநர் சுகுமார் மீது நம்பிக்கை வைக்கும் பிறகு அந்த சங்கடம் போகின்றது என்று ராஷ்மிகா கூறியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top