Connect with us

ஷூட்டிங்கில் விபத்து… கண்ணை இழந்திருப்பேன்! – பிரியங்கா சோப்ரா அதிர்ச்சி பேட்டி..

Featured

ஷூட்டிங்கில் விபத்து… கண்ணை இழந்திருப்பேன்! – பிரியங்கா சோப்ரா அதிர்ச்சி பேட்டி..

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தமிழ் சினிமாவில் தனது ஆரம்பத்தை 2002ம் ஆண்டு வெளியான “தமிழன்” திரைப்படத்தின் மூலம் செய்தார். இத்திரைப்படத்தில் நடிகர் விஜயுடன் சேர்ந்து நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு, தமிழ் ரசிகர்களிடையே பிரியங்காவுக்கு தனிச்சிறப்பான இடத்தை ஏற்படுத்தியது.

ஆனால், அந்தப்படத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவைப் புறக்கணித்த அவர், பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். ஹிந்தி திரைப்படங்களுக்கு அப்பால் மராத்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போதில் ஹாலிவுட்டிலும் பல முக்கிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். பிரபல ஹாலிவுட் பாடகர் நிக் ஜோனஸ் என்பவரை திருமணம் செய்து கொண்ட பிரியங்கா சோப்ரா, தற்போது ஒரு பெண் குழந்தைக்கு தாயாகியுள்ளார். இந்நிலையில், அவர் அண்மையில் ஒரு ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த பேட்டியில், “ஹெட்ஸ் ஆஃப் ஸ்டேட்” திரைப்படத்தின் ஷூட்டிங்கின் போது ஒரு விபத்து ஏற்பட்டதாகவும், அந்த விபத்தில் தன்னை கண்ணை இழந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்ததாகவும் கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top