Connect with us

சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ உரிமையை கைப்பற்றியது பிரபல OTT நிறுவனம்..!!

Cinema News

சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ உரிமையை கைப்பற்றியது பிரபல OTT நிறுவனம்..!!

எஸ்.கே.வின் மிரட்டலான நடிப்பில் உருவாகி உள்ள அமரன் படத்தை பிரபல OTT நிறுவனம் பல கோடி ருபாய் கொடுத்து வாங்கி உள்ளதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகி வரும் படம் தான் அமரன்

சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல தென்னிந்திய நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார் . இதுமட்டுமின்றி இந்த படத்தில் எஸ்.கே மற்றும் சாய் பல்லவியுடன் சேர்ந்து ஏராளமான இளம் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டீஸர் கடந்த சில சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது . ராணுவ வீரராக மிடுக்கான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள சிவகார்த்திகேயனின் இந்த படத்தை திரையரங்குகளில் பார்க்க ரசிகர்கள் செம ஆவலாக உள்ளனர் .

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலால் வீரமரணமடைந்த சென்னையை சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து தான் இப்படம் உருவாகி உள்ளது .

இந்நிலையில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அமரன்’ திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் ரூ.55 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு வெளியான ‘மாவீரன்’ திரைப்படத்தை விட இரண்டு மடங்கு அதிக தொகைக்கு ‘அமரன்’ டிஜிட்டல் உரிமை விற்பனையாகியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பதற்றமின்றி பக்குவமாக ஆடிய லக்னோ - ராஜஸ்தான் அணிக்கு 197 ரன்கள் இலக்கு..!!

More in Cinema News

To Top