Connect with us

சமூக வலைத்தளத்தை அதிரவைத்த பூஜா ஹெக்டே ‘மோனிகா’ பாடல்..

Featured

சமூக வலைத்தளத்தை அதிரவைத்த பூஜா ஹெக்டே ‘மோனிகா’ பாடல்..

நடிகை பூஜா ஹெக்டே தற்போது தமிழ், தெலுங்கு, மற்றும் ஹிந்தி மொழிகளில் முக்கியமான நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து வருகிறார். தமிழில் தற்போது விஜய்யுடன் இணைந்து “ஜனநாயகன்” படத்தில் நடித்துள்ளார். பூஜா ஹெக்டே நடித்த படங்களில் அவரது நடன திறமைக்கு பெரும் முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. குறிப்பாக, தமிழில் விஜய்யுடன் இணைந்து நடித்த அரபிக் குத்து பாடல் மிகப் பெரும் வைரலாகியது.

இந்த வருடம் பூஜா ஹெக்டேவிற்கு தமிழில் சிறப்பான ஆண்டு என்று கூறலாம். சூர்யா இணைந்த “ரெட்ரோ” படத்தில் இடம்பெற்ற “கனிமா” என்ற பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்பாடல் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வடிவிலும் வைரலாகி, யூடியூப்பில் 100 மில்லியன் பார்வையாளர்களை நெருங்கியுள்ளது. “கனிமா” பாடலில் பூஜா ஹெக்டேவின் நளினம் மற்றும் நடனம் ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளது.

கடந்த சில நாட்களில் வெளியான “கூலி” படத்தின் “மோனிகா” என்ற பாடலில் பூஜா ஹெக்டே சிறப்பு நடனத்துடன் நடித்து சமூக வலைதளங்களில் டிரென்டாகி வருகிறது. இந்த பாடலில் அவரது தோற்றம், நளினம் மற்றும் உடை ஆகியவை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் வைரலாகி, இப்பாடல் தற்போது யூடியூப்பில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதேபோல், இந்த பாடல் தெலுங்கு மொழியிலும் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்தகைய வெற்றிகளால் இந்த ஆண்டு தமிழில் பூஜா ஹெக்டேவிற்கு சிறப்பான வருடமாக கருதப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஆன்மீக ஒளியில் மூழ்கிய சூப்பர் ஸ்டாரின் புதிய லுக்கை பாருங்க!

More in Featured

To Top