Connect with us

பொங்கல் பரிசு தொகுப்பு – நாளை முதல் டோக்கன் விநியோகம்..!!

Featured

பொங்கல் பரிசு தொகுப்பு – நாளை முதல் டோக்கன் விநியோகம்..!!

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 1000 பெறுவதற்கான டோக்கன் நாளை முதல் விநியோகம் செய்யப்படும் என தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.

ஒவ்வரு வருடமும் பொங்கல் பண்டிகைக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த வருடமும் பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளது .

தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை தமிழ்நாடு அரசு சில நாட்களுக்கு முன் அறிவித்தது .

அதன்படி, பொங்கல் பரிசுத் தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது .

அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் மறு வாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது .

இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்து பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை மகிச்சியுடன் கொண்டாட அணைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1000 ருபாய் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ருபாய் 1000 பெறுவதற்கான டோக்கன் நாளை முதல் விநியோகம் செய்யப்பட உள்ளதாக தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.

டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும் நாள், நேரத்தில் பொதுமக்கள் ரேஷன் கடைகளுக்குச் சென்று பொருட்கள் மற்றும் 1000 ரூபாய் பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  Malaysiaல் Ajith fans களைகட்டும் – ALMS ரேஸ் this weekend!🔥

More in Featured

To Top