Connect with us

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த பிச்சைக்காரன் 3 எப்போது? – விஜய் ஆண்டனி கொடுத்த அப்டேட்!

Featured

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த பிச்சைக்காரன் 3 எப்போது? – விஜய் ஆண்டனி கொடுத்த அப்டேட்!

நடிகர் விஜய் ஆண்டனி கடந்த 2016-ம் ஆண்டு நடித்த திரைப்படம் பிச்சைக்காரன். இந்த திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, பிச்சைக்காரன் 2 படத்தை விஜய் ஆண்டனி தான் இயக்கியும் நடித்தும் வெளியிட்டார். இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நல்ல வசூலைப் பெற்றது.

பிச்சைக்காரன் 2-இன் வெற்றியைத் தொடர்ந்து, பிச்சைக்காரன் 3 படத்தை எடுக்க படக்குழு முடிவு செய்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற மார்கன் திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் பிச்சைக்காரன் 3 குறித்து விஜய் ஆண்டனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் பதிலளிக்கையில், “பிச்சைக்காரன் 3 படத்தின் கதையை இப்போது கூட சொல்ல முடியும். இது, முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்” என தெரிவித்துள்ளார். மேலும், “விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். 2027-ம் ஆண்டு கோடை விடுமுறையில் படம் வெளியாகும்” எனவும் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top