Connect with us

பஹல்காம் தாக்குதலில் ஆவேசமான ரஜினி: கடுமையான தண்டனை அவசியம்..

Featured

பஹல்காம் தாக்குதலில் ஆவேசமான ரஜினி: கடுமையான தண்டனை அவசியம்..

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் ஹிந்து ஆண்களை குறிவைத்து நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து நாடுமுழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், ‘ஜெயிலர் 2’ படத்தின் ஷூட்டிங்கை முடித்த நடிகர் ரஜினிகாந்த், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, காஷ்மீர் தாக்குதல் குறித்து கேட்ட கேள்விக்கு அவர் ஆவேசமாக பதிலளித்தார்.

“தீவிரவாத செயல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. காஷ்மீரில் அமைதி திரும்பியிருப்பது சிலருக்கு பிடிக்கவில்லை. அதை கெடுக்கவே இப்படி செய்கிறார்கள். அதை செய்தவர்களையும், பின்னால் இருப்பவர்களையும் சீக்கிரமா கண்டுபிடிக்க வேண்டும். கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்.

மறுபடியும் அப்படி செய்ய வேண்டும் என்று அவர்கள் கனவிலும் நினைக்க கூடாது. அதற்கான தடை நிச்சயமாக இருக்கும். அப்படி செய்வார்கள் என நம்பிக்கை இருக்கிறது” என்று ரஜினி கூறினார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top