Connect with us

பா. ரஞ்சித்தின் ரகசியம்: விஜயகாந்தை வில்லனாகக் கற்பனை செய்தேன்!

Featured

பா. ரஞ்சித்தின் ரகசியம்: விஜயகாந்தை வில்லனாகக் கற்பனை செய்தேன்!

பா. ரஞ்சித், இயக்குனராக தனது பயணத்தை 2012ம் ஆண்டில் அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் தொடங்கியவர். அதற்கு முன், அவர் சென்னை 28 படத்தில் வெங்கட் பிரபு உதவி இயக்குனராக பணியாற்றியிருந்தார். அட்டகத்தி திரைப் படத்துடன் அறிமுகமான பா. ரஞ்சித், தொடர்ந்து கார்த்தி, ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் வெற்றிகரமான படங்களை இயக்கினார். அவரது கடைசித் திரைப்படம் தங்கலான், இதில் விக்ரம் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், தற்போது 22வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நடந்து வரும் நிலையில், பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான தங்கலான் திரைப்படம் திரையிடப்பட்டது. விழாவிலிருந்து பேசிய பா. ரஞ்சித், மறைந்த நடிகர் விஜயகாந்த் குறித்து ஒரு நினைவை பகிர்ந்துள்ளார்.அவர் கூறியதாவது: “நான் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது கதை எழுதத் தொடங்கினேன். அப்போது, விஜயகாந்த் சாரை மிகவும் பிடிக்கும், அதனால் அவரை வில்லனாக கற்பனை செய்து சில கதைகள் எழுதினேன்.”

இந்த பேச்சு, விஜயகாந்தின் மீது பா. ரஞ்சித்தின் பக்தி மற்றும் அவரின் சிறிய காலங்களில் ஏற்பட்ட தனிப்பட்ட அனுபவத்தை வெளிப்படுத்துகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top