Connect with us

எங்களின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது – விவாகரத்தை அறிவித்தார் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா..!!

Featured

எங்களின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது – விவாகரத்தை அறிவித்தார் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா..!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ஹர்திக் பாண்ட்யா தனது மனைவி நடாஷா உடனான உறவை முறித்துக்கொள்வதாக அறிவித்துள்ளார் .

ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் IPL தொடரில் ஜொலித்து இன்று இந்திய கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத நட்சத்திர வீரராக வலம் வருபவர் ஹர்திக் பாண்ட்யா.

ஒரு ஆல் ரவுண்டராக தனது அணிக்காக அனைத்தையும் செய்து வரும் ஹர்திக் பாண்ட்யாவுக்கு இந்த வருடம் துன்பமும் இன்பமும் மாறி மாறி கிடைத்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.

நடப்பு IPL தொடரில் மோசமான பார்மில் இருந்த ஹர்திக் பல விமர்சனங்களை சந்தித்து வந்த நிலையில் அன்மையில் நடந்து முடிந்த T20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி இந்திய அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக மாறியுள்ளார்.

இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் அவரது மனைவி நடாஷா கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது தனது மனைவி நடாஷா உடனான உறவை முறித்துக்கொள்வதாக ஹர்திக் பாண்ட்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ஹர்திக் பாண்ட்யா வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

4 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த நிலையில், தற்போது நானும், நடாஷாவும் பரஸ்பரமாக பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். எங்கள் இருவருக்கும் இது தான் நல்லது என நம்புகிறோம்.

எங்கள் அன்பு மகன் அகஸ்தியா, எங்கள் இருவரின் வாழ்க்கையிலும் தொடர்ந்து இருப்பார். அவருக்காக எங்களால் முடிந்த அனைத்தையும் வழங்குவோம் . இந்த கடினமான நேரத்தில் உங்கள் அன்பும் ஆதரவும் வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்”

More in Featured

To Top