Connect with us

காவல் நிலைய வளாகத்தில் மர்ம பொருள் வெடித்ததில் ஒருவர் பலி..!!

Featured

காவல் நிலைய வளாகத்தில் மர்ம பொருள் வெடித்ததில் ஒருவர் பலி..!!

சங்ககிரி காவல் நிலைய வளாகத்தில் மர்ம பொருள் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சங்ககிரி காவல் நிலையத்தில் இன்று காவலர்கள் அனைவரும் வழக்கம் போல் பணிக்கு வந்துள்ளனர் அப்போது திடீரென பயங்கர சத்தம் கேட்க காவல் நிலையமே சற்று நேரத்தில் பதற்றத்தின் உச்சிக்கு சென்றது.

இதையடுத்து காவலர்கள் அனைவரும் ஓடி வந்து பார்பதபோது நியாமத்துல்லா (47) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார் . பரத் என்பவர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடியுள்ளார்.

இதையடுத்து பரத்தை மீட்ட போலீசார் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர் .இதையடுத்து இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார் கூறுகையில் :

காவல் நிலையத்தில் பழைய பொருட்களை எரித்தபோது விபத்து நடந்துள்ளது,குப்பையில் மர்ம பொருள் ஒன்று வெடித்ததில் தகரம் சிதறி மேலே பட்டதால் தான் நியாமத்துல்லா உயிரிழந்துள்ளதாக முதற் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

இதையடுத்து விபத்து நடந்த இடத்தில் சேலம் மாவட்ட எஸ்.பி. அருண் கபிலன் நேரில் பார்வையிட்டு விசாரணை செய்த நிலையில் பரத்தின் உடல்நிலை குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top