Connect with us

“அயலான் படத்தின் Trailer ரிலீஸ் குறித்த Update வெளியாகி Viral!”

Cinema News

“அயலான் படத்தின் Trailer ரிலீஸ் குறித்த Update வெளியாகி Viral!”

பல வருடங்களுக்கு முன்பே அயலான் படத்தில் நடிக்க ஆரம்பித்தார் சிவகார்த்திகேயன், இன்று நேற்று நாளை படத்தின் மூலம் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்த இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் இந்தியாவின் முதல் ஏலியன் படமாக அயலான் உருவாகியிருக்கிறது. இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

இந்தப் படம் வெளியாகி வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், கொரோனா காரணமாக முதலில் படத்தின் பணிகள் பாதிக்கப்பட்டன. அதன் பிறகு கிராஃபிக்ஸ் பணிகளால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என முதலில் கூறப்பட்டு படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவும் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று அறிவிப்பு வந்தவுடன் சிவாவின் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியிலும் எதிர்பார்ப்பிலும் இருந்தனர். சூழல் இப்படி இருக்க படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போனது. அதன்படி படமானது பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 12ஆம் தேதி வெளியாகிறது.ஏலியன்களை பற்றிய படம் என்பதால் கண்டிப்பாக கொண்டாட்டத்துக்கு குறை இருக்காது என்றே ரசிகர்கள் நம்பிக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் அயலான் படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்பது குறித்த அப்டேட் வெளியாகிறது. அதன்படி படத்தின் ட்ரெய்லரானது வரும் 5ஆம் தேதி (நாளை மறு நாள்) வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், இயக்குநர் ரவிக்குமாரும் சமூக வலைதள பக்கங்களின் மூலம் தெரிவித்திருக்கின்றனர். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கேப்டன் நினைவிடத்தில் உதவி கேட்ட தாய் - கையில் இருந்த பணத்தை அப்படியே கொடுத்த kpy பாலா

More in Cinema News

To Top