Connect with us

அஜித்தின் விடாமுயற்சி – First லுக் குறித்து வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

Cinema News

அஜித்தின் விடாமுயற்சி – First லுக் குறித்து வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளிநாட்டிலேயே உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் First லுக் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

மகிழ்ந்திருமேனி இயக்கத்தில் அஜித்தின் நடிப்பில் நெடு நீண்ட நாட்களாக உருவாகி வரும் படமே விடாமுயற்சி . முழுக்க முழுக்க அஜர்பைஜான் நாட்டிலேயே முழு படமும் உருவாகி வரும் நிலையில் இந்த படத்தை ஹெவி பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரித்த வருகிறது.

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் அஜித்துடன் அர்ஜுன் , த்ரிஷா , ஆரவ் , உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் First லுக் குறித்த அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது .

நாளை மாலை 7.03 மணிக்கு விடாமுயற்சி அப்டேட் என லைக்கா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதால் நிச்சயம் அது First லுக் போஸ்டராக தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஷங்கரின் கனவு படம்: ஹீரோ யார்? ரசிகர்களிடையே பரபரப்பு

More in Cinema News

To Top