Connect with us

ஒடிசா பக்கம் போறீங்களா FREEYA டீ குடிச்சுட்டு போங்க – ஒடிசா அரசின் அறிவிப்பால் செம குஷியில் ஓட்டுநர்கள்..!!

Featured

ஒடிசா பக்கம் போறீங்களா FREEYA டீ குடிச்சுட்டு போங்க – ஒடிசா அரசின் அறிவிப்பால் செம குஷியில் ஓட்டுநர்கள்..!!

நெடுந்தூரம் பயணம் மேற்கொள்ளும் ஓட்டுநர்களுக்காக ஒடிசா அரசு எடுத்துள்ள முக்கிய முடிவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

உலகில் எந்த மூலையில் இருந்தாலும் பொதுவாக நெடுந்தூரம் பயணம் மேற்கொள்ளும் ஓட்டுநர்கள் இரவில் தூக்கம் வராமல் இருக்க டீ குடிப்பதை வழக்கமாக வைத்திருப்பர் அல்லது அவரவர் விருப்பத்திற்கேற்ப தூக்கத்தை தவிர்க்க பிடித்ததை செய்து வருவார்கள் . ஆனால் பெருமாளாக ஓட்டுநர்கள் டீ குடிப்பதை தான் பழக்கமாக வைத்துள்ளனர்.

அந்தவகையில் இந்தியாவில் இருக்கும் ஒட்டுநர்களுக்காக இதுவரை இல்லாமல் முதல் முறையாக ஒடிசா அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இரவில் நெடுஞ்சாலையில் வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கு தாபாக்களில் இலவசமாக டீ வழங்க ஒடிசா அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சாலை விபத்துக்களை குறைக்க தாபாக்களில் ஓட்டுநர்கள் சிறிது நேரம் ஓய்வெடுக்கவும் ஒடிசா அரசு ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஓட்டுநர்களின் நலனை கருத்தில் கொண்டு ஒடிசா அரசு எடுத்துள்ள இந்த முடிவுக்கு பலரும் ஆதரவையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top