Connect with us

ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறார் ஓ.பன்னீர்செல்வம்..!!

Featured

ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறார் ஓ.பன்னீர்செல்வம்..!!

எதிர் வரும் தேர்தலில் சுயேச்சை சின்னத்தில் ராமநாதபுரம் தொகுதியில் களம் காண உள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் TTV தினகரனுடன் நட்பு பாராட்டி வந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தான் பாஜகவுடன் கூட்டணியில் இருப்பதாக நீண்ட நாட்களாக தெரிவித்து வந்தார் .

இந்நிலையில் தேர்தலில் போட்டியிட பாஜகவின் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு குறித்த விவரம் வெளியான நிலையில் ஓ.பி.எஸ் அவர்களுக்கு ஒரு தொகுதி கூட பாஜக கொடுக்கவில்லை.

இதனால் அதிர்ப்புத்தி அடைந்த ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களும் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில், நீண்ட நேரம் ஆலோசனை மேற்கொண்டனர் .

பலமணி நேர ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பி.எஸ் கூறியதாவது:

ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறேன் . எங்களுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்க பாஜக விரும்பியதாகவும் இரட்டை இலை சின்னம் இல்லாததால் ஒரு தொகுதியில் தற்போது போட்டியிட உள்ளதாகவும் ஓ.பி.எஸ் தெரிவித்தார்.

தொண்டர்கள் பலத்தை நிரூபிக்கவே ஒரு தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  Actress to Wildlife Photographer! 🐅🎥 மாளவிகாவின் அசத்தல் திறமை!

More in Featured

To Top