Connect with us

விஜய் பாஜகவின் பி டீமா? நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில்

Vijay_Seeman

Politics

விஜய் பாஜகவின் பி டீமா? நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில்

அரசியலில் ஈடுபட உள்ளதாக விஜய் அறிவித்த பிறகு அவரை பாஜகவின் பி டீம் என சிலர் கூறி வருவதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலடி கொடுத்துள்ளார்.

தனது ரசிகர் மன்றத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய் மக்கள் இயக்கம் என பெயர் மாற்றி மக்கள் நலப்பணிகளை செய்து வந்த நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்குவதாக அறிவித்தார். மேலும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அறிவித்தார்.

இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்தாலும், சிலர் பாஜகவின் அழுத்தத்தால் தான் அவர் அரசியலுக்கு வருகிறார் என்றும் அவரை பாஜகவின் பி டீம் என்றும் விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த சீமான், தான் அரசியலுக்கு வரும்போது காங்கிரசும் திமுகவும் ஆட்சியில் இருந்ததால் தான் என்ன அவர்களின் பி டீமா என கேள்வி எழுப்பியதோடு, விஜய் பாஜகவின் பி டீம் கிடையாது என மறுத்தார்.

மேலும், தங்களுடைய கட்சி வாக்குகள் எதுவும் இதனால் விஜய்க்கு செல்லாது என்றும், மக்களை சந்தித்து அவரது கொள்கைகளை முன்வைத்து வெல்லட்டும் என்றார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பத்திர பதிவுத்துறையில் சேவைக் கட்டணங்கள் உயர்வு - தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கண்டனம்..!!

More in Politics

To Top