Connect with us

தமிழகத்தில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை – சசிகலா பகிரங்க குற்றச்சாட்டு..!!

Featured

தமிழகத்தில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை – சசிகலா பகிரங்க குற்றச்சாட்டு..!!

தமிழ்நாட்டில் சமீப காலமாக கொலை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் யாருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகி உள்ளதாக சசிகலா கூறியுள்ளார்.

இதுகுறித்து சசிகலா வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் உள்ள அரசு பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியை ரமணி அவர்களை பள்ளியிலேயே கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்திருப்பது மிகவும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.

இதன் மூலம் தமிழகத்தில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை என்பது மீண்டும் நிரூபணம் ஆகியிருக்கிறது. திமுக தலைமையிலான விளம்பர ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதை இச்சம்பவம் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது. உயிரிழந்த ஆசிரியை ரமணியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழகத்தில் சட்ட விரோத செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த விளம்பர ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படாததால், யார் வேண்டுமானாலும் எதையும் செய்யலாம் என்ற அவல நிலை இருப்பது மிகவும் வேதனையளிக்கிறது.

இவ்வாறு குற்றச்செயல்கள் தொடர்ந்து நடைபெறுவதால் மாநிலத்தின் பாதுகாப்பே கேள்விக்குறியாகிறது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிக்காலத்தில் அமைதி பூங்காவாக இருந்த தமிழகம் இன்றைக்கு ஏழை, எளிய, சாமானிய மக்கள் வாழ தகுதியற்ற, பாதுகாப்பற்ற ஒரு மாநிலமாக மாறி வருவது மிகுந்த வேதனையளிக்கிறது.

தமிழகத்தில் உள்ள இளம் வயதினர் தவறான பாதைகளுக்கு சென்று விடாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது ஒரு அரசின் தலையாய கடமையாகும். எனவே, திமுக தலைமையிலான அரசு கொஞ்சமாவது தமிழக மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, எஞ்சியிருக்கும் ஆட்சிக் காலத்திலாவது,தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என சசிகலா வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top