Connect with us

அசத்தலான அம்சங்களுடன் வெளியானது புதிய Apple Airpods 4..!!

Featured

அசத்தலான அம்சங்களுடன் வெளியானது புதிய Apple Airpods 4..!!

ஆப்பிள் ஐ போனின் புதிய மாடலான ஐ போன் 16 , 16 ப்ளஸ் , 16 ப்ரோ உள்ளிட்ட புதிய மாடல்கள் அமெரிக்காவில் நேற்று அறிமுகபடுத்தப்பட்ட நிலையில் தற்போது அசத்தலான அம்சங்களுடன் புதிய Apple Airpods 4 ஐ ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கலக்கலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய ஆப்பிள் Airpods 4ல், கால் அழைப்புகளுக்கு தலையை அசைத்து பதிலளிக்கும்/நிராகரிக்கும் அசத்தல் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .

Type-C சார்ஜிங் வசதி, மேம்படுத்தப்பட்ட ஒலியமைப்பு, 30 மணி நேர பேட்டரி திறன், எளிதாக அணியக்கூடிய வடிவமைப்பு உள்ளிட்ட பல புதுப்பித்தலுடன் இந்த Airpods வெளியாகியுள்ளது.

2 வேரியண்ட்களில் வெளியாகியுள்ள இதன் விலை, Standard Airpods 4 12,900, Airpods 4 (ANC – Active Noise Cancellation) ₹17,900 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது . மேலும் இந்த Airpods 4 வரும் செப் 20 ஆம் தேதி முதல் முதல் இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளதாகவும் ஆப்பிள் அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  🎥 தனுஷ் “கர” – ஹிட் ஆகுமா? முதல் நாள் கலவையான சிக்னல்!

More in Featured

To Top