Connect with us

தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடருக்கு: இந்திய முக்கிய வீரர்கள் பங்கேற்பில் சந்தேகம்

Sports

தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடருக்கு: இந்திய முக்கிய வீரர்கள் பங்கேற்பில் சந்தேகம்

தென் ஆப்பிரிக்கா இந்தியாவில் 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா வெற்றிபெற்று 1–0 முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் டிசம்பர் 22-ம் தேதி தொடங்குகிறது. டெஸ்ட் முடிந்ததும், இந்தியா–தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடர் டிசம்பர் 30-ம் தேதி தொடங்கவுள்ளது. 30-ம் தேதி முதல் போட்டி, டிசம்பர் 3-ம் தேதி இரண்டாவது போட்டி மற்றும் 6-ம் தேதி மூன்றாவது போட்டி நடைபெறும். இந்த தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இந்த ஒருநாள் தொடரில் இந்திய முன்னணி வீரர்கள் பலர் பங்கேற்பதில் சிக்கல் நிலவி வருகிறது. கேப்டன் சுப்மன் கில் முதலாவது டெஸ்டின் போது கழுத்து வலி காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அவர் இரண்டாவது டெஸ்டில் விளையாடுவதற்கும் சந்தேகம் எழுந்துள்ள நிலையில், ஒருநாள் தொடரிலும் விலகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. துணை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் ஏற்பட்ட காயத்திலிருந்து மீண்டு வருகிறார். அவர் இன்னும் முழு உடற்தகுதியை பெறாததால், ஒருநாள் தொடரில் பங்கேற்பது சாத்தியமில்லை என்று கூறப்படுகிறது.

மேலும், ஹர்திக் பாண்ட்யா ஆசிய கோப்பையில் ஏற்பட்ட தசைபிடிப்பு காயத்திலிருந்து இன்னும் முழுமையாக குணமடையாததால், அவர் ஒருநாள் தொடரில் பங்கேற்க மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பணிச்சுமை காரணமாக இந்த தொடருக்கு ஓய்வு எடுக்க முடிவெடுத்துள்ளார். இருப்பினும், ஹர்திக் மற்றும் பும்ரா இருவரும் டிசம்பர் 9-ம் தேதி தொடங்கும் தென் ஆப்பிரிக்கா–இந்தியா டி20 தொடரில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தோல்வி காரணம் குறித்து கம்பீருக்கு கவாஸ்கர் முழு ஆதரவு

More in Sports

To Top