Connect with us

OTTயில் ரிலீஸாகவிருக்கும் நயன்தாராவின் ‘அன்னப்பூரணி’ படம்! Viral!

Cinema News

OTTயில் ரிலீஸாகவிருக்கும் நயன்தாராவின் ‘அன்னப்பூரணி’ படம்! Viral!

ரசிகர்களால் லேடி சூப்பர்ஸ்டார் என கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை நயன்தாரா. சமீபத்தில் நயன்தாராவின் 75வது படமாக உருவாகி டிசம்பர் 1ஆம் தேதி வெளியான படம் அன்னப்பூரணி. இந்தப் படத்தில் ஜெய், சத்யராஜ் ஆகியோரும் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

புதுமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா படத்தை இயக்கியிருந்தார். கடந்த டிசம்பர் 1ம் தேதி வெளிவந்த இப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து ஜெய், சத்யராஜ், அச்யுத் குமார், கார்த்திக் குமார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

நல்ல எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படம் ஓரளவு சுமாரான வரவேற்பை பெற்றது. வசூலும் எதிர்பார்த்த அளவு இல்லை. இதன்பின் மிக்ஜாம் புயல் காரணமாக இப்படத்தின் வசூலும் பாதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து படம் தற்போது ஓடிடியில் வெளியாகவுள்ளது. அதன்படி வரும் 29ஆம் தேதி முதல் அன்னப்பூரணி திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஸ்டீரிம் ஆகவுள்ளது. அத்துடன் படத்தை தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top