Connect with us

கணவருடன் விவகாரத்தா..? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா..!!

Cinema News

கணவருடன் விவகாரத்தா..? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா..!!

தனது காதல் கணவர் விக்னேஷ் சிவனை நடிகை நயன்தாரா விவாகரத்து செய்ய உள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல் பரவி வாட்ச் நிலையில் தற்போது அது வதந்தி என சொல்லாமல் சொல்லி உள்ளார் நடிகை நயன்தாரா.

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவரும் தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வரும் விக்னேஷ் சிவனும் நீண்ட நெடு நாட்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு பெற்றோர் சம்மத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களது திருமணத்தில் பல மொழிகளின் சூப்பர் ஸ்டார்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர் ஆனால் இவர்களது திருமண வீடியோவை தான் யாராலும் சரியாக பார்க்க முடியவில்லை.

இதையடுத்து இந்த ஜோடி வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தனர். இதையடுத்து இருவரும் அவரவர் வேளைகளில் மிகவும் பிசியாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் நயன்தாராவின் ஃபாலோயர்கள் பட்டியலில் விக்னேஷ் சிவன் பெயர் நீக்கப்பட்டிருந்தது . இதனை கண்ட நெட்டிசன்கள் இருவருக்கும் எதோ ப்ரிச்சனை போய்க்கொண்டிருப்பதாகவும் இவர்கள் இன்னும் சில நாட்களில் விவாகரத்து பெற போகிறார்கள் என்றும் வாய்க்கு வந்தபடி வதந்திகளை பரப்பி வந்தனர்.

ஆனால் அப்படி ஒரு சமாச்சாரம் இல்லையடாம் நயன் மற்றும் விக்கி குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக தான் வாழ்ந்து வருகிறார்களாம் .

இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை காரணமாகவே நயன்தாராவின் பக்கத்தில் இருந்து விக்னேஷ் சிவனுடன் சேர்நது இன்னும் சிலருடைய பெயர் காணாமல் போய் உள்ளது .

இணையத்தில் இதற்காகவே சுற்றி வரும் நெட்டிசன்கள் நல்ல இருக்கும் குடும்பத்தில் போறபோக்கில் இதைவைத்துபோட்டுவிட்டு சென்று விட அது மளமளவென வைரலாகியும் விடுகிறது.

இதையடுத்து இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நயன்தாராவின் இன்ஸ்டா பக்கத்தில் விக்னேஷ் சிவன் பெயர் மீண்டும் இடம்பெற்றுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கொளுத்தும் வெயிலில் பந்துவீச்சில் அசத்திய சென்னை அணி - ராஜஸ்தான் அணி 141 ரன்கள் குவிப்பு..!!

More in Cinema News

To Top