Connect with us

எதை இழக்கிறோம்?.. ‘பறந்து போ’ படம் நெகிழ வைத்தது – நயன்தாரா நெகிழ்ச்சி பகிர்வு!

Featured

எதை இழக்கிறோம்?.. ‘பறந்து போ’ படம் நெகிழ வைத்தது – நயன்தாரா நெகிழ்ச்சி பகிர்வு!

இயக்குநர் ராம் இயக்கத்தில் இதுவரை நான்கு திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அவை: கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி மற்றும் பேரன்பு. இந்த தொடர் பயணத்தில் ஐந்தாவது படமாக தற்போது வெளியான திரைப்படம் ‘பறந்து போ’ ஆகும். இப்படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்துள்ளார். அவருடன் கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி, அஜூ வர்கீஸ் மற்றும் விஜய் யேசுதாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், நடிகை நயன்தாரா இப்படத்தை பார்வையிட்டு, தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். அந்த பாராட்டில், “இந்த பரபரப்பான உலகத்தை விட்டு விலகி, உண்மையான வாழ்க்கை என்னவென்று உணர விரும்பினால், குழந்தைகளை கூட்டிக்கொண்டு மலை ஏறுங்கள். அல்லது அவர்களை இயக்குநர் ராம் அவர்களின் ‘பறந்து போ’ திரைப்படத்திற்கு அழைத்துச் சென்று காணுங்கள்.

வாழ்க்கையில் நமக்கு என்ன தேவை, எதை இழக்கிறோம் என்பதைக் குறித்து இந்த படம் மிகவும் அழகாக எடுத்துரைக்கிறது. நான் பார்த்த மிக இனிமையான படங்களில் இது ஒன்று. ராம் ஒரு சிறந்த இயக்குநர். அவருக்கும், படக்குழுவிற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார். ‘பறந்து போ’ திரைப்படம் நயன்தாராவிடம் இருந்து பெற்றுள்ள இந்த பாராட்டு, படக்குழுவிற்கு மிகுந்த உற்சாகத்தை வழங்கி இருக்கிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பிக் பாஸ்‌இல் வெடித்த முதல் வெடி! – திவாகர், கெமி இடையே கடும் வாக்குவாதம்!

More in Featured

To Top