Connect with us

பாலிவுட்டில் நயன்தாராவுக்கு இப்படி ஒரு டிமாண்டா..!வேற லெவல் மார்க்கெட்டை பிடித்த நயன்!

Cinema News

பாலிவுட்டில் நயன்தாராவுக்கு இப்படி ஒரு டிமாண்டா..!வேற லெவல் மார்க்கெட்டை பிடித்த நயன்!

20 ஆண்டுகளில் நயன்தாரா 80 படங்களுக்கு மேல் நாயகியாக நடித்து இருக்கின்றார்….இன்னும் ஒரு சில படங்கள் அவருக்கு வர காத்திருக்கின்றது..அதனை போல மாயா, அறம், கனெக்ட் போன்ற ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் நடிக்க நயன்தாரா ஆர்வம் காட்டிவருகிறாராம்..அந்த வரிசையில் இவர் நிறைய படங்கள் செய்தும் வருகின்றார்…

அடுத்த மாதம் வெளியாகவுள்ள அன்னபூரணி என்ற திரைப்படம் நயன்தாராவின் 75 வது படமாகும்…இந்த படத்தின் போஸ்டர் முதல் அனைத்தும் வெளிவந்து வைரல் ஆகி இருந்தது…இதற்கிடையே இவர் நடிகர் மாதவன்,சித்தார்த் இணைந்து நடிக்கும் டெஸ்ட் என்ற படத்திலும் நடித்து வருகிறார் இப்படி மிகவும் பிசி என சொல்லும் வகையிலோடி வருகின்றார்.

இதனை அடுத்த பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் மண்ணாங்கட்டி சின்ஸ் 1960 படத்தில் நடிக்கவிருக்கிறார். அதனை போல நயன்தாரா துரை செந்தில்குமாரின் இயக்கத்திலும் ஒரு முக்கிய படத்தில் நடிக்க உள்ளார்…இந்த படத்தின் ஷூட்டிங் மார்ச் மாதத்தில் நடைபெற இருக்கின்றது…

ஜவான் படத்தின் வெற்றியை தொடர்ந்து நயன்தாராவுக்கு பாலிவுட் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம்…பாலிவுட் கதைகளை கேட்பதுடன் நிறைய சம்பளம் வாங்க உள்ளார் என்ற தகவல் வந்து இருக்கின்றது..அதனால் பொறுத்திருந்து பாப்போம் அடுத்த தீபிகா கூட இவரா இருக்கலாம்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திரையரங்குகளில் சக்கை போடு போட்ட 'மஞ்சும்மெல் பாய்ஸ்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது..!!!

More in Cinema News

To Top