Connect with us

நயன்தாரா மேடையில் அல்லு அர்ஜுனை அவமதித்தார்.. காரணம் என்ன தெரியுமா?

Featured

நயன்தாரா மேடையில் அல்லு அர்ஜுனை அவமதித்தார்.. காரணம் என்ன தெரியுமா?

இந்திய அளவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் யார் தெரியுமா? அது நடிகர் அல்லு அர்ஜுன் தான். அவரது சமீபத்திய படங்கள் ஆயிரம் கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளன. இப்போது அவர் அட்லீ இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரூ.600 கோடிக்கும் மேல் செலவில் தயாரிக்க இருக்கிறது. இந்த அளவிலான பட்ஜெட்டில் தற்போது எந்த தமிழ் ஹீரோவிடம் யாரும் முதலீடு செய்யவில்லை. இதைத்தான் நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் விவாதிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இதோ, இன்னொரு சர்ச்சை. நடிகை நயன்தாரா, அல்லு அர்ஜுனை மேடையில் அசிங்கப்படுத்திய சம்பவம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? 2016ல் ஒரு விருது விழா நடந்தது. அந்த விழாவில், நயன்தாராவுக்கு விருது வழங்க அல்லு அர்ஜுன் மேடைக்கு வந்தார். ஆனால் நயன்தாரா அவரிடம் விருது வாங்க மறுத்தார்.

“நானும் ரவுடி தான்” படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் கையில்தான் வாங்குவேன் என்று கூறினார். இதனால் அல்லு அர்ஜுன் அமைதியாக விலகிச் சென்றார். அந்த நேரத்தில், நயன்தாரா தனது காதலர் மீது இருக்கும் அக்கறையை காட்டினார் என்று சிலர் கூறினார்கள். ஆனால், அதே நேரத்தில் அல்லு அர்ஜுனை மேடையில் அசிங்கப்படுத்தினார் என்றும் விமர்சனங்கள் எழுந்தன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top