Connect with us

பெற்றோர்கள் முன்னிலையில் நடைபெற்ற நாக சைதன்யா- சோபிதா திருமண நிச்சயதார்த்தம் – வைரல் போட்டோஸ்..!!

Cinema News

பெற்றோர்கள் முன்னிலையில் நடைபெற்ற நாக சைதன்யா- சோபிதா திருமண நிச்சயதார்த்தம் – வைரல் போட்டோஸ்..!!

பிரபல தென்னிந்திய நடிகை சமந்தாவின் முன்னாள் கணவரும், நடிகருமான நாக சைதன்யாவுக்கும் நடிகை சோபிதா துலிபாலா பெற்றோர்கள் சம்மதத்துடன் இன்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

திரையுலகில் நட்ச்சத்திர ஜோடிகளாக வலம் வந்த சமந்தா – நாக சைத்தன்யா கடந்த 2017-ஆம் ஆண்டு காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர் .

திருமணமாகி 4 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த இந்த ஜோடி திடீரென விவாகரத்து செய்வதாக இருவரும் தனித்தனியே அறிவித்து ரசிகர்களை பேரதிர்ச்சியில் மூழ்கடித்தனர்

இந்நிலையில் நடிகை சமந்தா அடுத்தடுத்த படங்களில் மிகவும் பிஸியாக நடித்து வரும் நிலையில் நாக சைத்தன்யாவும் ஒரு பக்கம் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

இப்படி இருக்கும் சூழலில் நடிகர் நாக சைத்தன்யா மற்றும் சோபிதா துலிபாலா இருவரும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் இருவரும் இதற்கு எந்த மறுப்பும் தெரிவிக்காமல் இருந்தனர் .

இந்நிலையில் பெற்றோர்கள் முன்னிலையில் நாக சைதன்யா சோபிதா துலிபாலா இருவருக்கும் இன்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

இந்த நிச்சியதார்த்த புகைப்படங்களை நடிகரும் நாக சைதன்யா தந்தையுமான நாகர்ஜுனா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் செம வைரலாக பரவி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  STR 49 வெற்றிமாறன்–சிம்பு புதிய படம்: டைட்டில் ரிவீல்!

More in Cinema News

To Top