Connect with us

நடிகர் விஜயைப் பற்றி நன்றாக தெரியும்.. பிரபல இசையமைப்பாளர் ஓபன் டாக்

Vijay_Santhosh_Narayanan

Cinema News

நடிகர் விஜயைப் பற்றி நன்றாக தெரியும்.. பிரபல இசையமைப்பாளர் ஓபன் டாக்

நடிகர் விஜயின் அரசியல் வருகை குறித்து பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், அவரது பைரவா படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி நடிகர் விஜய் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிவிப்பில், தனது தலைமையில் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்குவதாக அறிவித்தார். 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு கட்சியின் சின்னம், கொடி மற்றும் கொள்கை அறிவிக்கப்படும் என்றார்.

மேலும், 2026 சட்டசபை தேர்தலே தனது இலக்கு எனத் தெரிவித்துள்ள நடிகர் விஜய், இதற்காக தற்போது ஒப்புக்கொண்டுள்ள படங்களை முடித்துக் கொண்டு முழுநேர அரசியலில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், விஜய் நடிப்பில் வெளியான பைரவா படத்திற்கு இசையமைத்த இயக்குனர் சந்தோஷ் நாராயணன் விஜயின் அரசியல் வருகை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதாவது தனிப்பட்ட முறையில் தனக்கு விஜயை நன்றாக தெரியும் என்றும், அவர் மிகவும் நல்ல மனிதர் என்றும் கூறினார்.

அவர் மேலும், “பைரவா படத்தின்போது, அவருடன் பழகியுள்ளேன். அவர் மிகவும் நேர்மையானவர். அவரைப் போன்ற நல்லவர்கள் அரசியலுக்கு வருவது நல்லது. அவரது அரசியல் வருகையை நான் வரவேற்கிறேன்.” எனத் தெரிவித்தார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  காங்கிரஸ் நிர்வாகி சந்தேக மரணம் - சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம் - எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!!

More in Cinema News

To Top