Connect with us

பாலிவுட் சினிமாவுக்கு Tough கொடுக்க வரும் படங்கள்…List இதோ..!

Cinema News

பாலிவுட் சினிமாவுக்கு Tough கொடுக்க வரும் படங்கள்…List இதோ..!

தென்னிந்திய சினிமாவில் அதிக Production Value போட்டும்..வசூலை குவிக்கவும் உள்ள படங்களின் பட்டியல் இதோ..

கடந்த 2022-ம் ஆண்டு வெளியான கன்னட திரைப்படமான காந்தாரா நாடு முழுவதும் பிளாக்பஸ்டர் ஹிட்டானது…15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான காந்தாரா படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி, ரூ 400 கோடி வசூல் செய்தது..இப்படி ஒரு ஹிட் அடிக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை…இந்த நிலையில் காந்தாரா படத்தின் Prequal தற்போது உருவாகி வருகிறது…இந்த படத்தின் பட்ஜெட் 120 கோடிக்கும் மேல் என்று சொல்லப்படுகின்றது…

அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான புஷ்பா படம் நாடு முழுவதும் மிகப்பெரிய ஹிட்டானது….இந்த படத்தில் இடம்பெற்ற பாடலே படத்தை மற்றுமொரு இடத்திற்கு கொண்டு சென்றது….

இந்த நிலையில் புஷ்பா 2 படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. அதன் இரண்டாம் பாகம் முதல் பாகத்தை விட மிகப் பெரிய அளவில் உருவாகிறது புஷ்பா படத்தின் முதல் பாகம் 60 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்ட நிலையில், 2-ம் பாகம் 500 கோடி என்ற என்ற மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது…அதனால் நிச்சயம் 1000 கோடி அடிக்கும் என்று எதிர்பார்க்க படுகின்றது…

பிரபாஸ், அமிதாப், கமல்ஹாசன், தீபிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் கல்கி 2898 AD படம் இன்றுவரை அதிக பொருட்செலவில் இருக்கும் படமாக கூறப்படுகிறது. 600 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகின்றது இந்த படமும் பெரிய சாதனை படைக்கும் என்று எதிர்ப்பாக்க படுகின்றது…

கேஜிஎஃப் பிரசாந்த் நீல் இயக்கும் அடுத்த படம் சலார்…பிரபாஸ் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் பிருத்விராஜ் ,ஸ்ருதிஹாசன், ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்…சலார் படம் 400 கோடி ரூபாய் செலவில் உருவாகி வருகிறது ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிக்கிறது இது கன்னடா மற்றும் தெலுங்கில் வர இருக்கின்றது…

தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்ப்பில் இருக்கும் ஒன்று தான் ஷங்கர் – கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வரும் இந்தியன் 2 படம் …1996-ம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக உருவாகி வரும் இப்படத்தில் பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ப்ரியா பவானி ஷங்கர், எஸ்,ஜே, சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், காளிதாஸ் ஜெயராம் என பலர் உள்ளனர்..இப்படம் 350 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருவதால் இதுவும் பெரிதளவில் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்க படுகின்றது..

See also  காதலும் கலவரமும் கலந்த அர்ஜுன் தாஸின் ‘ரசவாதி’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!!

அதனை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் கங்குவா படம் குறித்தும் அதிகமான எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது.10 கதாப்பாத்திரங்களில் சூர்யா நடிக்கும் இப்படத்தில் திஷா பதானி அவருக்கு ஜோடியாக நடித்து உள்ளார்….இப்படமும் 350 கோடி செலவில் உருவாகி வருகிறது..இப்போதே பிசினஸ் முடிந்ததாக சொல்லவும் படுகின்றது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top