Connect with us

“மோகன்லாலின் மலைக்கோட்டை வாலிபன் Teaser வெளியாகி Viral!”

Cinema News

“மோகன்லாலின் மலைக்கோட்டை வாலிபன் Teaser வெளியாகி Viral!”

பிரபல மலையாள இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசெரி இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள மலைக்கோட்டை வாலிபன் திரைப்படம் வரும் ஜனவரி 25ம் தேதி வெளியாகும் என்கிற அறிவிப்பும் வெளியாகி உள்ளது. சியான் விக்ரமின் தங்கலான் படமும் ஜனவரி 25 என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு படங்களும் பலப்பரீட்சை நடத்த காத்திருக்கின்றன.

நடிகர் மோகன்லால் நடிப்பில் பல OTT படைப்புகள் கடந்த சில ஆண்டுகளாக வெளியாகி வருகின்றன. கடைசியாக தியேட்டரில் பிரம்மாண்டமாக வெளியான அரபிக் கடலின் சிங்கம் படம் படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில், மலைக்கோட்டை வாலிபன் படத்தை ரொம்பவே நம்பி காத்திருக்கிறார் மோகன்லால்.

இந்த ஆண்டு நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார் மோகன்லால். மலையாளத்தில் அவர் நடித்த படங்கள் ஓடாத நிலையில், அவர் கேமியோவாக நடித்த ஜெயிலர் திரைப்படம் இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

கண்ணால் காண்பது மெய், காதால் கேட்பது பொய் என மோகன்லால் சொல்லி விட்டு இதுவரை நீ கண்டது எல்லாம் பொய் இனிமேல் நீ காண்பது மட்டுமே நிஜம் என தனது முகத்தை காட்டும் காட்சியுடன் டீசர் முடிகிறது. என்னம்மா இதுதான் டீசரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். படத்தின் அறிமுக டைட்டில் டீசர் போல உள்ளது என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தனுஷ் பட்டறையில் அடுத்த சூப் சாங் : வைரலாக ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் சூப் சாங்..!!

More in Cinema News

To Top