Connect with us

ரவி மோகன் பேச்சு இணையத்தில் வைரல்… சர்ச்சை கிளம்பியது

Cinema News

ரவி மோகன் பேச்சு இணையத்தில் வைரல்… சர்ச்சை கிளம்பியது

தமிழ் சினிமாவில் தற்போது நடிகர் ரவி மோகன் தொடர்பான விவகாரம் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தனது மனைவி ஆர்த்தி ரவியுடன் பிரிவு அறிவித்ததிலிருந்து, அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக பாடகியும் ஹீலருமான கெனிஷா பிரான்சிஸுடன் அவர் தொடர்பில் இருப்பதாக கூறப்பட்டதையடுத்து இந்த விவகாரம் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றது.

இதற்கிடையில், தனது முதல் இயக்குநர் முயற்சியான “An Ordinary Man” திரைப்படத்தின் பூஜை நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படங்களை ரவி மோகன் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அந்த புகைப்படங்களில் கெனிஷா பிரான்சிஸ் உடன் அவர் தோன்றியதால், இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்து விமர்சனம் செய்தனர்.

இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த ரவி மோகன், “இன்றைய சூழலில் ஆண்கள்தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்” என்று கூறியதன் மூலம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இந்த கருத்துக்கு எதிராக திருநங்கை செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான தனுஜா சிங்கம், ஆர்த்தி ரவிக்கு ஆதரவாக கடுமையாக பதிலடி அளித்து, ரவி மோகனின் கருத்தை விமர்சித்துள்ளார்.

இதனால் இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதமாக மாறி, ரசிகர்கள் மற்றும் இணைய பயனர்கள் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மறுதணிக்கை ரத்து – “ஜனநாயகன்” வெளியீடு எப்போது?

More in Cinema News

To Top