Connect with us

மாஸ் மகாராஜா டாக்டர். சிவராஜ்குமார் புதிய படம்: மெகா பட்ஜெட் மற்றும் முழு விவரம்!

Featured

மாஸ் மகாராஜா டாக்டர். சிவராஜ்குமார் புதிய படம்: மெகா பட்ஜெட் மற்றும் முழு விவரம்!

கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகர் டாக்டர். சிவராஜ்குமார், தனது ஹாட்ரிக் வெற்றியின் மூலம் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக தனது நிலையை உறுதிப்படுத்தியுள்ளார். ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்தில் மாஸ் நடிப்புடன் தமிழ் ரசிகர்களின் இதயங்களை கவர்ந்த அவர், பிறகு தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

இப்போது, அவரது புதிய படம், #MB, ஒரு மெகா பட்ஜெட் திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை மும்பையில் அமைந்துள்ள ADD-ONE பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிக்கின்றது. இப்படத்தை இயக்கும் ஒருவராக, ‘வல்லரசு’ படத்தை இயக்கிய என். மகாராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். படத்தின் படப்பிடிப்பு 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் தொடங்கும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

#MB படத்தின் தொழில்நுட்பக்குழு மற்றும் மற்ற நடிகர்கள் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top