Connect with us

🎬 திருமணம் கட்டாயம் இல்லை – சிம்புவின் ஓபன் டாக் இணையத்தில் வைரல்

Cinema News

🎬 திருமணம் கட்டாயம் இல்லை – சிம்புவின் ஓபன் டாக் இணையத்தில் வைரல்

தமிழ் சினிமா வட்டாரத்தில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ள செய்தியாக, நடிகர் சிம்பு தனது தனிப்பட்ட கருத்துகளால் மீண்டும் கவனம் ஈர்த்துள்ளார். தற்போது அரசன் படத்தில் நடித்து வரும் சிம்பு, இந்த படத்தின் மூலம் இயக்குநர் வெற்றிமாறன் உடன் முதல் முறையாக இணைந்துள்ளதால் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனைத் தொடர்ந்து, டிராகன் பட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கவும் அவர் தயாராகி வருகிறார். அந்த படத்திற்கான முன்தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், சிம்புவிடம் தொடர்ந்து கேட்கப்பட்டு வரும் “எப்போது திருமணம்?” என்ற கேள்விக்கு அவர் அளித்த ஓபன் டாக் பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. திருமணம் குறித்து பேசும் போது, “திருமணம் கட்டாயம் இல்லை. மனதளவில் இருவரும் தயாராக இருக்கும் போது மட்டுமே அது நடக்க வேண்டும். சமூகத்தை திருப்திப்படுத்துவதற்காக நான் எந்த உறவிலும் இணைய மாட்டேன்” என்று அவர் தெரிவித்துள்ளார். சிம்புவின் இந்த கருத்து, இன்றைய உறவுகள், சமூக அழுத்தங்கள் மற்றும் தனிப்பட்ட தேர்வுகள் குறித்து புதிய விவாதங்களை கிளப்பியுள்ளதுடன், ரசிகர்கள் மற்றும் சமூக வலைதள பயனர்களிடையே பல்வேறு கருத்துக்களையும் உருவாக்கி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top