Connect with us

மாரி செல்வராஜின் தொடர் வெற்றி, விக்ரம் மகனுக்கு பிறந்த விடிவு காலம்

mari selvaraj

Cinema News

மாரி செல்வராஜின் தொடர் வெற்றி, விக்ரம் மகனுக்கு பிறந்த விடிவு காலம்

Mari Selvaraj: மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகிய பைசன் படம் இன்று தீபாவளி ஒட்டி அனைத்து திரையரங்களிலும் ரிலீஸ் ஆகி இருக்கிறது. இதில் அனுபமா பரமேஸ்வரன், பசுபதி, கலையரசன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதையானது அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியை சேர்ந்த கபடி வீரர் மனத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கிறது.

அந்த வகையில் இன்று வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தை பார்த்த உதயநிதி அவருடைய கருத்தை தெரிவிக்கும் வகையில் இப்படத்தின் கதையை பாராட்டி இணையத்தில் அவருடைய பதிவை போட்டிருக்கிறார். இவர்களுக்கு ஏற்கனவே மாமன்னன் படத்தின் மூலம் கூட்டணி அமைந்ததால் இருவரும் நல்ல தோழர்களாகவும் வலம் வந்து வருகிறார்கள்.

bison
bison

மேலும் இதற்கு முன்னதாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த பரியேறும் பெருமாள், வாழை, மாமன்னன், கர்ணன் போன்ற படங்கள் வெற்றியடைந்ததால் மாரி செல்வராஜ் சினிமாவில் அவருக்கென்று ஒரு தனி பாதையை வகுத்துக் கொண்டார்.

அந்த வகையில் விக்ரம் மகனான துருவ் விக்ரமுக்கும் தற்போது அங்கீகாரம் கிடைக்கும் வகையில் பைசன் படத்தில் மூலம் ஒரு விடிவு காலம் பிறந்து இருக்கிறது. என்ன தான் துருவிக்ரம் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்காமல் போராடி வந்தார். தற்போது மாரி செல்வராஜ் மூலம் ஒரு வெற்றியை பார்த்ததால் அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  லாஜிக்கே இல்லாமல் சொதப்பும் டீசல், ஹரிஷ் கல்யாணனின் நிலைமை என்ன?

More in Cinema News

To Top