Connect with us

மணத்தி கணேசனின் ஆசிரியரை நேரில் சந்தித்து நெகிழ்ந்த மாரி செல்வராஜ் – ‘பைசன்’ வெற்றிக்குப் பின்னாலுள்ள உண்மை மரியாதை!

Cinema News

மணத்தி கணேசனின் ஆசிரியரை நேரில் சந்தித்து நெகிழ்ந்த மாரி செல்வராஜ் – ‘பைசன்’ வெற்றிக்குப் பின்னாலுள்ள உண்மை மரியாதை!

மாரி செல்வராஜ் இயக்கி, துருவ் விக்ரம் நடித்துள்ள ‘பைசன்’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த படம், தமிழக கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட உணர்ச்சிமிகு வாழ்க்கைக் கதை என்பதால் மேலும் பேசப்படும் படமாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தின் திருச்செந்தூர் அருகே உள்ள மணத்தி கிராமத்தைச் சேர்ந்த கணேசன், சிறுவயதிலிருந்தே விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டவர். பள்ளிக் காலத்தில் ஹாக்கி வீரராக விளையாடிய அவர், பின்னர் கபடியில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார். தனது உறுதி, உழைப்பு மற்றும் தன்னம்பிக்கையால் தேசிய மட்டத்துக்கு உயர்ந்த அவர், இந்தியாவுக்காக ஆசிய விளையாட்டு விழா மற்றும் Pro Kabaddi League போட்டிகளில் பங்கேற்று பெரும் சாதனைகள் படைத்தார். இதற்காக இந்திய அரசால் அர்ஜுனா விருது வழங்கப்பட்டு அவரது பெருமை மேலும் உயர்ந்தது.

கணேசனின் திறமையை முதன்முதலில் கண்டறிந்தவர், சாயர்புரம் போப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் தங்கராஜ். அவரின் வழிகாட்டுதலே கணேசனை கபடியில் சிறந்த வீரராக உருவாக்கியது.

இதையடுத்து, இயக்குநர் மாரி செல்வராஜ், நிஜ வாழ்க்கை ‘பைசன்’ ஆன மணத்தி கணேசனுடன் இணைந்து, அவரது முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் தங்கராஜை நேரில் சந்தித்து நெகிழ்ச்சியுடன் மரியாதை செலுத்தினார்.

இதுகுறித்து எக்ஸ் (X) தளத்தில் புகைப்படங்களுடன் பதிவிட்ட மாரி செல்வராஜ்,

“அண்ணன் மணத்தி கணேசனின் பெருங்கனவுக்கு முதல் ஒளி ஏற்றிய பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மெஞ்சனாபுரம் தங்கராஜ் (சந்தனராஜ்) அவர்களை சந்தித்து என் நன்றியும் மரியாதையும் தெரிவித்தேன்,”
எனக் கூறியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மாரி செல்வராஜின் தொடர் வெற்றி, விக்ரம் மகனுக்கு பிறந்த விடிவு காலம்

More in Cinema News

To Top