Connect with us

மகன் இழப்பிற்குப் பிறகு பாரதிராஜாவின் வேதனை… சகோதரர் கூறும் சோகமான விஷயம்!

Featured

மகன் இழப்பிற்குப் பிறகு பாரதிராஜாவின் வேதனை… சகோதரர் கூறும் சோகமான விஷயம்!

தமிழ் சினிமா உலகில் யாரும் எதிர்பாராத ஒரு மரணம் சில வாரங்களுக்கு முன்பு அதிர்ச்சி அடையச் செய்தது. இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜாவின் மகன். மாரடைப்பால் திடீரென உயிரிழந்தார்.

இந்த செய்தி, ரசிகர்களை மட்டுமல்ல, பல பிரபலங்களையும் மிகவும் வருத்தமடையச் செய்தது. மனோஜ், தனக்கு பிடிக்கவில்லை என்றாலும், தந்தையின் ஆசைக்காக ‘தாஜ்மஹால்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். ஆனால் வெற்றி பெறவில்லை. பின்னர், தனக்குப் பிடித்த இயக்குனர் பாதையில் செல்லத் துணிந்தார். ஆனால் உடல்நிலை உதவவில்லை. தனது மகனை இழந்தது இயக்குனர் பாரதிராஜாவுக்கு பெரிய இடையூறாக அமைந்துள்ளது.

இந்நிலையில், பாரதிராஜாவின் சகோதரர் ஜெயராஜ் அளித்த பேட்டியில் அவர் கூறுவது பாரதிராஜாவுக்கு சில நேரங்களில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. வீட்டுக்கு யாராவது வந்தாலே, மனோஜ் பற்றி பேசிக் கொண்டு அழுகிறாராம். மாடியில் விட்டுவிட்டு வந்தால், கீழே வந்து தனக்கே தனியாக உட்கார்ந்துகொள்கிறார். முக்கியமாக, மருமகளையும் பேத்திகளையும் நல்லபடியாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார். இதை எல்லாம் கேள்விப்பட்டால், உண்மையிலேயே மனது துடிக்குது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top