Connect with us

இறப்பதற்கு முன் மனோபாலா கூறிய வார்த்தைகள்: சுந்தர் சி வருத்தம்..

Featured

இறப்பதற்கு முன் மனோபாலா கூறிய வார்த்தைகள்: சுந்தர் சி வருத்தம்..

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான சுந்தர் சி, கடந்த ஆண்டு அரண்மனை 4 படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை பெற்றார். இந்த ஆண்டின் முதல் வெற்றியை அவர் ‘மதகஜராஜா’ படத்தின் மூலம் பெற்றுள்ளார்.

சுந்தர் சி தற்போது நடிப்பு, இயக்கம் மற்றும் தயாரிப்பில் மிகவும் பிஸியாக வலம் வருகிறார். இந்த நிலையில், அரண்மனை 4 ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் அவர் கூறிய மனோபாலா குறித்த செய்தி அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அவர் கூறியதாவது, “அரண்மனை 4 படத்தில் மனோபாலா நடிக்காதது மிகப்பெரிய இழப்பு. இந்த படத்தில் அவருக்கென முக்கியமான கேரக்டர் இருந்தது. ஆனால், அந்த நேரத்தில் மனோபாலாவிடமிருந்து ஒரு பெரிய மெசேஜ் வந்தது. ‘நான் மருத்துவமனையில் இருக்கிறேன். என்னால் உனக்கு எந்த தொந்தரவும் இருக்கக் கூடாது. எனவே இந்த படத்தில் நான் நடிக்க முடியாது. எனக்கு பதிலாக வேறு ஒருவரை நடிக்க வைக்கச் செய்யுங்கள். நான் ரொம்ப நாள் இருக்க மாட்டேன்’ என்று அவர் கூறினார். அந்த வார்த்தையை நான் இன்னும் மறக்க முடியவில்லை” என அவர் வருத்தத்தை தெரிவித்தார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top