Connect with us

விஜய்க்காக மலேசியா கொண்டாட்டம்: தளபதி திருவிழா டிக்கெட்டுகள் அதிரடி விற்பனை!

Cinema News

விஜய்க்காக மலேசியா கொண்டாட்டம்: தளபதி திருவிழா டிக்கெட்டுகள் அதிரடி விற்பனை!

விஜய்யின் இறுதி படமான ஜனநாயகன் வெளியீட்டை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 27-ஆம் தேதி மலேசியாவில் மிகப்பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

இது சாதாரண இசை வெளியீட்டு விழா அல்ல — விஜய்க்கு சிறப்பு டிரிபியூட் வழங்கும் ‘தளபதி திருவிழா’ எனும் பெரிய கொண்டாட்டமாக திட்டமிட்டு வருகின்றனர். சைந்தவி, ஆண்ட்ரியா, எஸ். பி. சரண், திபு, ஹரிஹரன், அனுராதா ஸ்ரீராம் உள்ளிட்ட பல பிரபல பின்னணி பாடகர்கள் விஜய்யின் சூப்பர்ஹிட் பாடல்களை நேரலையில் பாடவுள்ளனர்.

மலேசியாவின் புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி, 85,000 பேருக்கு மேல் அமர்ந்து காணக்கூடிய அளவிற்கு வியக்கத்தக்கது. நிகழ்ச்சிக்கென தனிப்பட்ட டிக்கெட் புக்கிங் தொடங்கப்பட்டு, டிக்கெட் விலை ரூ. 2,141 முதல் ரூ. 14,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மொத்த வருவாய் மட்டும் ரூ. 40 கோடி வரை வரலாம் என கூறப்படுகிறது. அதனால், செலவுகளை கழித்தும் இந்த விழாவே பல கோடி லாபத்தை ஏற்படுத்தும் பெரிய நிகழ்ச்சியாக மாறியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “கணவன் போல் பிள்ளை…” – ஜாய் கிரிஸில்டாவின் மனதை உருக்கும் பதிவு!

More in Cinema News

To Top