Connect with us

தனுஷின் ‘குபேரா’ படத்தின் டீசர் குறித்த முக்கிய அப்டேட் வெளியானது..!!

Cinema News

தனுஷின் ‘குபேரா’ படத்தின் டீசர் குறித்த முக்கிய அப்டேட் வெளியானது..!!

தனுஷ் மற்றும் ராஷ்மிகா நடிப்பில் விறுவிறுப்பாக உருவாகி வரும் ‘குபேரா’ படத்தின் டீசர் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்திய சினிமவில் இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வரும் இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படமே ராயன்.

தனுஷ் இயக்கி நடித்துள்ள இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக உருவெடுத்தது.

இதையடுத்து தனுஷ் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படமே குபேரா . பிரபல தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கி உள்ள இப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க இவர்களுடன் நாகர்ஜூனா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இப்படத்தின் டீஸர் குறித்த முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி சேகர் கமுலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா உள்ளிடோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘குபேரா’ படத்தின் டீசர் வரும் 15ம் தேதி வெளியாகும் என சிறப்பு போஸ்டர் மூலம் படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  📺 OTT அப்டேட் – “Happy Raj” ரசிகர்களை கவரும் குடும்ப திரைப்படம்

More in Cinema News

To Top