Connect with us

21 நாட்களில் ஸ்லிம்மாக மாறிய மாதவன் – எப்படி என்பதை நீங்களே பாருங்க!

Featured

21 நாட்களில் ஸ்லிம்மாக மாறிய மாதவன் – எப்படி என்பதை நீங்களே பாருங்க!

இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மாதவன். கோலிவுட் முதல் பாலிவுட் வரை தனக்கென்று தனி இடத்தைப் பெற்றுள்ளார். சமீபத்தில், ராக்கெட்டரி திரைப்படத்திற்காக மாதவன் தனது உடல் எடையை அதிகரித்து இருந்தார். பின்னர், அந்த எடையை 21 நாட்களில் குறைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் மாதவன் 21 நாட்களில் உடல் எடையை எப்படி குறைத்தார் என்பதற்கான காரணங்களை அவர் தனது பேட்டியில் வெளிப்படுத்தியுள்ளார். உடல் எடையை குறைக்க அவர் பயன்படுத்திய முக்கியமான முறையாக Intermittent Fasting முறையை குறிப்பிடினார். Intermittent Fasting என்றால், குறிப்பிட்ட கால இடைவெளியில் மட்டும் உணவை எடுத்துக் கொள்ளும் முறை ஆகும். இது எடையை குறைக்கும் மட்டுமல்லாமல், உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. பெரும்பாலானவர்கள் 16/8 முறையை பின்பற்றுகின்றனர்.

இதில், மாதவன் கூறியதன்படி, மதியம் 12 மணிக்கு முதல் உணவு எடுத்துக்கொள்ளப்பட்டால், இரவு 8 மணிக்குள் இரண்டாவது உணவையும் முடித்துக்கொள்ள வேண்டும். அதன்பின், அடுத்த 16 மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் இருக்க வேண்டும். இதனால் உடல் எடை குறைவதற்கு உதவுகிறது. மேலும், மாதவன் தனது உணவை சுமார் 45-60 முறை மென்று சுவைத்து சாப்பிட்டுள்ளார். இரவு உணவை 6.45 மணிக்குள் முடித்துக் கொள்ளும் பழக்கமும் இருந்தது. காலை நடைப்பயிற்சி மற்றும் இரவில் ஆழ்ந்த தூக்கம் உடல் எடையை குறைக்க உதவியுள்ளன.

அவரது உணவுப் பழக்கத்தில் நிறைய பழச்சாறுகள் மற்றும் பச்சை காய்கறிகள் சேர்க்கப்பட்டுள்ளன. பதப்படுத்தப்பட்ட உணவுகளை முற்றிலும் தவிர்க்கும் தீர்மானமும் மாதவனுக்கு உடல் எடையை குறைக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதுபோன்ற முறைகளைப் பின்பற்றி மாதவன் குறைந்த காலத்தில் உடல் எடையை வெற்றிகரமாக குறைத்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இன்று மாலை வெளியாகவுள்ள பைசன் படத்தின் 'காளமாடன் கானம்' பாடல்

More in Featured

To Top