Connect with us

ஒரே நாளில் மோதும் மதராஸி மற்றும் காந்தா – சிவகார்த்திகேயன் vs துல்கர்!

Featured

ஒரே நாளில் மோதும் மதராஸி மற்றும் காந்தா – சிவகார்த்திகேயன் vs துல்கர்!

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இந்த படத்தில், சிவகார்த்திகேயனுடன் இளம் நடிகை ருக்மிணி வசந்த் ஜோடி சேருகிறார்.

இசைமைப்பாளராக அனிருத் பணியாற்றும் இப்படத்தில், பிஜு மேனன், விக்ராந்த், வித்யுத் மற்றும் சபீர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் பிரமாண்ட வேலைகள் தற்போது இறுதிக்கட்டத்தில் நடைபெற்று வருகின்றன. படக்குழுவின் தகவலின்படி, மதராஸி திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இதற்கிடையே, அதே நாளில் துல்கர் சல்மானின் புதிய திரைப்படமான காந்தா வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கியுள்ளார். கதாநாயகியாக இளம் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்துள்ளார். பெரிய எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படமும் செப்டம்பர் 5ஆம் தேதியே ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், சிவகார்த்திகேயனின் மதராஸி மற்றும் துல்கர் சல்மானின் காந்தா ஆகிய இரண்டு பெரிய திரைப்படங்களும் ஒரே நாளில் திரையரங்குகளில் மோதவிருக்கின்றன. இதற்கமைய, கடந்த ஆண்டு வெளியாகி வெற்றிப் பெறும் பட்டியலில் இடம்பிடித்த அமரன் மற்றும் லக்கி பாஸ்கர் திரைப்படங்களின் வெற்றியை போன்று, இந்த இரு படங்களும் திரையரங்குகளை பொங்கவைக்குமா என்பதற்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்து வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top