Connect with us

வடிவேலு, பகத் பாசில் நடித்த ‘மாரீசன்’ படத்தின் கதை இதுதானா?

Featured

வடிவேலு, பகத் பாசில் நடித்த ‘மாரீசன்’ படத்தின் கதை இதுதானா?

இயக்குனர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில், வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை மற்றும் வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றிய புதிய படம், விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் வடிவேலு மற்றும் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அவர்களுடன் கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி.எல்.தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவணா சுப்பையா, கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசை வழங்கியுள்ளார். இந்த படம் வரும் ஜூலை 25ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாக உள்ளது. மாமன்னன் படத்தின் வெற்றிக்கு பின், மாரீசன் படத்தில் வடிவேலு மற்றும் பகத் பாசில் இணைந்து நடித்துள்ளனர் என்பதால், இந்த புதிய படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

கதையின் சுருக்கம் குறித்து சொல்லப்போகையில், அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட வடிவேலு ஒரு பணக்காரராக உள்ளார். அவர் ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும்போது, அதில் இருந்த பணத்தை பகத் பாசில் கவனித்துவிடுகிறார். அந்த பணத்தை பெறுவதற்காக பகத் பாசில், வடிவேலுவை தன்னோடு பைக்கில் டிராப் செய்ய போகிறான். திருவண்ணாமலை முதல் நாகர்கோவில் வரை பைக்கில் மேற்கொள்ளப்படும் இந்த பயணம் படத்தின் முக்கியக் கதை ஆகும். இறுதியில், வடிவேலுவிடம் இருந்து பகத் பாசில் பணம் பெற்றாரா என்பது தான் கதை திருப்பம் ஆகும்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இன்று மாலை வெளியாகவுள்ள பைசன் படத்தின் 'காளமாடன் கானம்' பாடல்

More in Featured

To Top