Connect with us

லோகேஷின் பென்ஸ்: இரு முன்னணி நட்சத்திரங்கள்..

Featured

லோகேஷின் பென்ஸ்: இரு முன்னணி நட்சத்திரங்கள்..

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக உயர்ந்த லோகேஷ் கனகராஜ், தற்போது தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார். அவர் இயக்கத்தில் “கூலி” என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. அதே சமயம், “பென்ஸ்” என்ற புதிய திரைப்படம் அவரின் தயாரிப்பில் உருவாகி வருகிறது. இப்படம் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில், ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்துவருகிறார். இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியானதும் ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பு பெற்றது.

இந்நிலையில், “பென்ஸ்” படத்தில் ஒரு மாஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. இப்படம் முழுக்க ஆக்க்ஷன் கதைக்களத்தில் உருவாக இருப்பதாகவும், வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் மாதவனை ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது. ராகவா லாரன்ஸ் மற்றும் மாதவன் இணைந்து நடிப்பது, படத்திற்கு அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இந்த படத்தின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது, மேலும் ரசிகர்கள் இருவரும் சேர்ந்து நடிப்பதை கொண்டாடுகிறார்கள்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top