Connect with us

ஹீரோவாக அறிமுகமாகும் லோகேஷ் கனகராஜ் – தனது முதல் படத்துக்காகக் கற்றுக்கொள்ளும் முக்கியமான விஷயம்..

Featured

ஹீரோவாக அறிமுகமாகும் லோகேஷ் கனகராஜ் – தனது முதல் படத்துக்காகக் கற்றுக்கொள்ளும் முக்கியமான விஷயம்..

இயக்குநராக வெற்றிப் பாதையில் பயணித்து வரும் லோகேஷ் கனகராஜ், தற்போதைய தமிழ்த் திரைப்பட உலகில் மிகுந்த வரவேற்பைப் பெற்றவர். மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ், அதன் பின் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற திரைப்படங்களை தொடர்ந்து ஹிட் படங்களாக இயக்கி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

இப்போது, அவரின் இயக்கத்தில் ‘கூலி’ என்ற திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் மூலம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக இணைந்து பணியாற்றுகிறார். இந்த திரைப்படம் தற்போது இறுதிக்கட்ட பணிகளை சந்தித்து வருகிறது. ‘கூலி’ படத்திற்குப் பிறகு, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ‘கைதி 2’ படத்தை லோகேஷ் இயக்கவிருக்கிறார். இந்தப் படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இயக்குநராக மட்டுமின்றி, லோகேஷ் கனகராஜ் ஹீரோவாகவும் அறிமுகமாகவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஒரு ஆக்ஷன் கதைக்களத்தில் லோகேஷ் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த புதிய முயற்சிக்காக லோகேஷ் தற்போது மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். ஒரு புறம் ‘கூலி’ படத்தின் இறுதிக்கட்ட பணிகளை மேற்கொண்டு வரும் அவர், மற்றொரு புறம் தனது நடிப்பு பயணத்திற்கான உடற்கட்டமைப்பு மற்றும் சண்டைப் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

லோகேஷ் ஹீரோவாக நடிக்கும் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என திரைப்பட வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. ரசிகர்கள் இதற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம், லோகேஷ் கனகராஜின் அடுத்த புதிய அவதாரம் தமிழ்த் திரையுலகில் என்ன மாற்றங்களை கொண்டு வரப்போகிறது என்பதை.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top