Connect with us

விஜய்யின் GOAT பட ரிலீஸ் தேதி இதுதானா?! தீயாய் பரவும் தகவல்!

Cinema News

விஜய்யின் GOAT பட ரிலீஸ் தேதி இதுதானா?! தீயாய் பரவும் தகவல்!

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் சமீபத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான போஸ்டரில் தி கோட் படத்தில் நடித்து வரும் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் மற்றும் விஜய்யின் இன்னொரு லுக் வெளியாகி ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படத்தை ஆயுத பூஜை ரிலீஸாக வெளியிட்ட நடிகர் விஜய் அடுத்து பக்ரீத் பண்டிகையை டார்கெட் செய்து தி கோட் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், அது குறித்த எந்தவொரு அப்டேட்டையும் படக்குழு இன்னும் வெளியிடவில்லை.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் கோட் திரைப்படம் ஜூன் 13ம் தேதி வியாழக்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் படத்தை சீக்கிரமே வெளியிட்டு விடலாமா? என விஜய் கேட்டு வருவதாகவும் மே மாதம் படத்தின் ரிலீஸ் முந்துவதற்கும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்றும் லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிஜி மற்றும் டீ ஏஜிங் பணிகளும் வேகம் எடுத்திருக்கும் நிலையில், அஜித்தின் விடாமுயற்சி படத்துக்கு செக் வைக்கும் விதமாக படத்தை வெளியிடலாம் என்கிற பேச்சுக்களும் அடிபட்டு வரும் நிலையில், வாரிசு vs துணிவு கிளாஷ் காரணமாக இருவருக்குமே பலத்த அடி வாங்கியது என்பதால் சோலோ ரிலீஸ் ஆகவே வரலாம் என்பதில் விஜய் உறுதியாக இருக்கிறார் என்கின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கவினின் 'ஸ்டார்' படத்தை தாறுமாறாக புகழ்ந்த இயக்குநர் நெல்சன்..!!

More in Cinema News

To Top