Connect with us

STR 48 படத்திற்கு இவர்தான் ஹீரோயினா?! சிம்புவுக்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை!

Cinema News

STR 48 படத்திற்கு இவர்தான் ஹீரோயினா?! சிம்புவுக்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை!

நடிகர் சிம்பு நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’சிம்பு 48’ திரைப்படத்தில் தீபிகா படுகோனே மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது விஜய் படத்தில் நடித்த நடிகை தான் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிம்பு நடிப்பில், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் ’சிம்பு 48’ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு தயாராக வெளிநாடு சென்று திரும்பி இருக்கும் சிம்பு இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார்.

ஹீரோ, வில்லன் என இரண்டு வேடங்களில் இந்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் தீபிகா படுகோன், கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் அவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது வந்துள்ள தகவல் படி இந்த படத்தில் சிம்பு ஜோடியாக நடிக்க இருப்பது பூஜா ஹெக்டே என்று கூறப்படுகிறது.

இவர் ஏற்கனவே சமீபத்தில் விஜய் நடித்த ’பீஸ்ட்’ படத்தில் நாயகியாக நடித்தார் என்பதும் சில தெலுங்கு படங்களில் தற்போது நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிம்புவின் பிறந்த நாள் பிப்ரவரி 3ஆம் தேதி கொண்டாட இருக்கும் நிலையில் அன்றைய தினத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top