Connect with us

கமல்ஹாசனின் ‘Thug Life’ படத்தில் இணைகிறாரா நடிகை ஐஸ்வர்யா ராய்?! லேட்டஸ்ட் தகவல்!

Cinema News

கமல்ஹாசனின் ‘Thug Life’ படத்தில் இணைகிறாரா நடிகை ஐஸ்வர்யா ராய்?! லேட்டஸ்ட் தகவல்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தில் இணையும் நட்சத்திரங்களின் தகவல்கள் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகின்றன.

ஏற்கனவே இந்த படத்தில் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான் உள்ளிட்டோர் இணைந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று கௌதம் கார்த்திக் மற்றும் ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் இணைந்தனர் என்பதை பார்த்தோம்.

இந்நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் ’இருவர்’ ’குரு’ ’பொன்னியின் செல்வன்’ உள்ளிட்ட படங்களில் ஐஸ்வர்யா ராய் நடித்த நிலையில் தற்போது மீண்டும் அவரது படத்தில் இணைகிறார் என்பதும் கமல்ஹாசனுடன் முதல் முதலாக இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் கமலஹாசன் ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடிக்க இருப்பதாகவும், ஜெயம் ரவிக்கு ஜோடி த்ரிஷா என்றும் கூறப்படுகிறது. ஐஸ்வர்யா ராய் இந்த படத்தில் இணைந்துள்ளதை அடுத்த இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இளையராஜா - அமைச்சர் அன்பில் மகேஷ் சந்திப்பு - காரணம் என்ன தெரியுமா..?

More in Cinema News

To Top