Connect with us

லால் சலாம் படத்தின் டீசர் அப்டேட்..தலைவர் நிரந்தரம்!#LAL SALAAM

Cinema News

லால் சலாம் படத்தின் டீசர் அப்டேட்..தலைவர் நிரந்தரம்!#LAL SALAAM

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள ‘லால் சலாம்’ திரைப்படத்தின் டீசர் வரும் நவம்பர் 12-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்திற்கு அதிகமாக அனைவரும் காத்து உள்ளனர்…இது தலைவர் வேற மாதிரி ஒரு செய்கை செய்ததாக தகவல் வந்து இருக்கின்றது..

தனுஷ் நடித்த 3,கவுதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை போன்ற படங்களுக்குப் பிறகு,ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள படம், லால் சலாம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தப் படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்னும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்த் கேமியோ வேடத்தில் நடித்துள்ளார்.அதை தவிர விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் பிரதான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர்..

படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.லைகா சார்பில் சுபாஷ்கரன் படத்தை தயாரித்துள்ளார்…ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழகத்தில் படத்தை வெளியிடுகிறது…இதற்கான ஒப்பந்தம் முன்பே முடிந்தது..

இதன் படப்பிடிப்பு மும்பை, சென்னை, புதுச்சேரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வந்த நிலையில் அண்மையில் முடிந்ததாக படக்குழு அறிவித்தது.

இந்நிலையில், படத்தின் டீசர் வரும் நவம்பர் 12-ம் தேதி காலை 10.45 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான போஸ்டர் வந்து இருக்கின்றது..இனி அப்டேட் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்க படுகின்றது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஒவ்வொரு காட்சியும் தரம் - வெளியானது கவினின் ஸ்டார் படத்தின் ட்ரைலர்..!!!

More in Cinema News

To Top