Connect with us

வசூல் மழையில் லால் சலாம் திரைப்படம் – இரண்டு நாட்களில் எத்தனை கோடி தெரியுமா..?

Cinema News

வசூல் மழையில் லால் சலாம் திரைப்படம் – இரண்டு நாட்களில் எத்தனை கோடி தெரியுமா..?

திரையரங்குகளில் வெறித்தனமாக ஓடிக்கொண்டிருக்கும் லால் சலாம் திரைப்படத்தின் லேட்டஸ்ட் வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.

லைக்கா நிறுவனத்தின் மாபெரும் பொருட்செலவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் லால் சலாம் . இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர் .

இதுமட்டுமின்றி இப்படத்தில் மொய்தீன் பாய் எனும் சிறப்பான தரமான கவுரவ கதாப்பாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க அவருடன் சேர்ந்து இந்த படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரரான கபில் தேவ்வும் நடித்துள்ளார்.

இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த சில நாட்களுக்கு முன் படு பிரம்மாண்டமாக நடந்து முடிந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் அன்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது .

இந்நிலையில் லால் சலாம் படம் கடந்த 9 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கோலாகலமாக வெளியானது.

இப்படம் வெளியான நாள் முத்துகள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்படத்தில் வசூல் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி இப்படம் வெளியான முதல் நாளில் ரூ.3.55 கோடி வசூல் செய்தது. இந்த நிலையில் 2-வது நாளில் சுகுமார் ரூ.3 கோடி வசூல் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஹைதராபாத்தின் அதிரடி பேட்டிங்கை கட்டுப்படுத்துமா மும்பை..? டாஸ் வென்ற மும்பை பந்துவீச முடிவு..!!

More in Cinema News

To Top