Connect with us

Star படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிகை அதிதி போஹன்கர்! Viral Video!

Cinema News

Star படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிகை அதிதி போஹன்கர்! Viral Video!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடர் மூலம் பிரபலமானவர் கவின். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாதியிலேயே வெளியேறினார். இதனைத் தொடர்ந்து ‘நட்புனா என்னான்னு தெரியுமா’, ‘லிஃப்ட்’ படங்களில் நடித்தார்.

இவர் நடித்து வெளியான ‘டாடா’ வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து அவர் பல படங்களில் நடித்து வருகிறார். இப்போது,‘பியார் பிரேமா காதல்’ படத்தின் இயக்குநர் இளனுடன் ‘ஸ்டார்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். எழில் அரசு ஒளிப்பதிவு செய்கிறார். BVSN பிரசாத், ஸ்ரீநிதி சாகர் தயாரிக்கும் இந்த படம் பிப். 9-ம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், இந்தப் படத்தில் கதாநாயகியாக அதிதி எஸ். போஹன்கர் நடிப்பதாக படக்குழு வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளது. அவர் ‘ஜிமிக்கி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் ஏற்கெனவே ‘ஜெமினி கணேசனும், சுருளிராஜனும்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி: ‘ஜனநாயகன்’ சென்சார் வழக்கு மீண்டும் உயர்நீதிமன்றம் நோக்கி

More in Cinema News

To Top