Connect with us

லால் சலாம் படத்தை வெளியிட அரசு தடை விதிப்பு? காரணம் இதுதான்

Lal_Salaam_Rajinikanth

Cinema News

லால் சலாம் படத்தை வெளியிட அரசு தடை விதிப்பு? காரணம் இதுதான்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் திரைப்படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அந்த படத்தை தங்கள் நாட்டில் வெளியிட குவைத் அரசு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்தின் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா இயக்கத்தில் கிரிக்கெட்டை மையமாக வைத்து லால் சலாம் என்ற படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்தும் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது தந்தையை சங்கியில்லை எனக் கூறியதோடு, சங்கியாக இருந்திருந்தால் இந்த படத்தில் நடித்திருக்கவே முடியாது என்றும் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார் .
இந்நிலையில், படத்தின் டிரைலரும் வெளியாகியுள்ள நிலையில் அதை பார்க்கும்போது, படத்தில் கிரிக்கெட்டை மட்டுமல்லாது இந்து-முஸ்லீம் மத மோதல் குறித்த சம்பவங்களும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், படத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான விஷயங்கள் இருக்கலாம் எனக் கருதி குவைத் அரசாங்கம் படத்தை தங்கள் நாட்டில் வெளியிட தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குவைத் அரசாங்கம் ஏற்கனவே இதுபோல் சில படங்களை தடை செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top