Connect with us

99 வயதில் காலமான பழம்பெரும் நடிகை கொல்லங்குடி கருப்பாயி… ரசிகர்கள் இரங்கல்..

Featured

99 வயதில் காலமான பழம்பெரும் நடிகை கொல்லங்குடி கருப்பாயி… ரசிகர்கள் இரங்கல்..

பழம்பெரும் நடிகை மற்றும் நாட்டுப்புறப் பாடகர் கொல்லங்குடி கருப்பாயி இன்று காலமானார். அவருக்கு வயது 99. ஆண்பாவம் படத்தில் விகே ராமசாமிக்கு அம்மாவாகவும், பாண்டியராஜனுக்கு பாட்டியாகவும் நடித்த கதாபாத்திரம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் நடித்ததிலிருந்து அவருடைய நடிப்புத் திறமைப்பற்றிய பாராட்டுகள் அதிகரித்தன.

தொடர்ந்து கோபாலா கோபாலா, கபடி கபடி, ஆயிசு நூறு, ஆண்களை நம்பாதே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சினிமாவுக்கு வருவதற்கு முன்பே, நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர். அதனைத் தொடர்ந்தும் சினிமாவிலும் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடியுள்ளார். அவரது சாதனையில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்புறப் பாடல்களைப் பாடியிருக்கிறார் என்பது தான். அவரின் பாடல்கள் தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளன.

வயது மூப்பு காரணமாக இன்று காலமான கொல்லங்குடி கருப்பாயியின் மறைவு திரையுலகினரிடையே மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் மறைவு செய்தியை அறிந்த பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது இரங்கல்களைத் தெரிவித்துவருகிறார்கள்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top